Home Featured கலையுலகம் கலாபவன் மணி உடலில் பூச்சி மருந்து! பிரேத பரிசோதனையில் உறுதி!

கலாபவன் மணி உடலில் பூச்சி மருந்து! பிரேத பரிசோதனையில் உறுதி!

1068
0
SHARE
Ad

Kalabhavan-Maniகொச்சி – நடிகர் கலாபவன் மணியின் மரண வழக்கில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எத்தனால், மெத்தனால் ஆகிய நச்சுக்களும் கலந்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் கலாபவன் மரணத்திற்கு முன்பும், மரணம் சம்பவித்த சமயத்திலும் அவருடன் இருந்த 3 உதவியாளர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அவரது உடல் உள்ளுறுப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வின்போது இதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். குளோரோபைரிபாஸ் என்ற வேதிப்பொருள் கலாபவன் மணியின் குடலில் இருந்துள்ளது. இது பூச்சி மருந்தாகும். அது போக மெத்தனால் மற்றும் எத்தனாலும் இருந்துள்ளது.

#TamilSchoolmychoice

குளோரோபைரிபாஸ் நச்சுப் பொருளாகும். இதை உட்கொண்டால் நரம்பு மண்டலம் ஸ்தம்பித்து மரணம் ஏற்படும். முன்னதாக கலாபவன் மணி கல்லீரல் பிரச்சினையால் இறந்திருப்பது போலத் தோன்றுவதாக கேரளா போலீஸார் கூறியிருந்தனர்.

அத்தோடு மது அருந்தியதால் அவர் இறந்திருக்கலாம் என்று போலீஸார் கூறியிருந்தனர். ஆனால் தனது சகோதரர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் உறுதியாக கூறி வந்தார்.

மேலும் மணியுடன் இருந்த அவரது உதவியாளர்கள் மூவர் மீதும் அவர் சந்தேகம் தெரிவித்திருந்தார். இதையடுத்து மணியுடன் இருந்த 3 முக்கிய உதவியாளர்களான முருகன், விபின், ஸ்ரன் ஆகிய மூவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.