கோலாலம்பூர் – நாளை வழக்கத்தை விட கூடுதலான உஷ்னத்திற்கும், இந்த மாதம் முழுவதும் மதிய நேரங்களில் கொளுத்தும் வெயிலுக்கும் தயாராகிக் கொள்ளுங்கள்.
எல் நினோ நிகழ்வு காரணமாக நாளை சூரியக் கதிர்கள் நேரடியாக பூமத்திய ரேகை (Equator) மீது விழுவதால், ஈகுவானக்ஸ் நிகழ்வு மற்றும் வெப்ப அலைகள் ஏற்படவுள்ளன.
இதனால், வழக்கத்தை விடக் கூடுதல் வெப்பம் ஏற்படவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் டத்தோ சே காயா இஸ்மாயில் கூறுகையில், “இந்த மாத இறுதி வரையில் அதிக வெப்பம் இருக்கும். குறிப்பாக மதியம் 2 முதல் 4 மணி வரையில் அதிகபட்ச வெப்பநிலைப் பதிவாகும் என எதிர்பார்க்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.