Home Featured இந்தியா விவசாயத்தில் சாதனை: தமிழக விவசாயி பூங்கோதை அம்மாவிடம் ஆசி பெற்ற மோடி!

விவசாயத்தில் சாதனை: தமிழக விவசாயி பூங்கோதை அம்மாவிடம் ஆசி பெற்ற மோடி!

763
0
SHARE
Ad

TN+Farmar+Poongothai-+Modiபுதுடெல்லி – டெல்லியில் சிறந்த விவசாயிக்கான விருதை, தமிழகத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட பெண் விவசாயி பூங்கோதை அம்மாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். அப்போது,  பூங்கோதை அம்மாவை குனிந்து கும்பிட்டு பிரதமர் ஆசி பெற்றார்.

டெல்லியில் விவசாயிகள் முன்னேற்ற மாநாடு நேற்று தொடங்கியது. கடந்த நிதியாண்டில் விவசாயத்தில் சாதனைகளை புரிந்த விவசாயிகளுக்கு பிரமதர் மோடி கிருஷி கர்மண் விருதுகளை வழங்கி கவுரவித்தார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட பெண் விவசாயி பூங்கோதை அம்மாவிடம் குனிந்து கும்பிட்டு பிரதமர் ஆசி பெற்றார்.

இது குறித்து டெல்லியில் இருக்கும் விவசாயி பூங்கோதையிடம் பேசியபோது, “கீழே உக்காந்திருந்தேன். மேடைக்கு வரச் சொன்னார்கள். பிரதமர் ஐயாவை (மோடி) பாத்து கும்பிட்டேன். அவரும் குனிஞ்சு காலை பாத்து கும்பிட்டார்.

#TamilSchoolmychoice

பிறகு விருதும் கொடுத்தாங்க. இந்த விருது வாங்கினது பெரிய சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு. நான் பெரிசா படிப்பெல்லாம் படிக்கல. எனக்கு விவசாயம் மட்டும்தான் தெரியும். நெல், பருத்தி, சோளம்னு பயிர் செய்வேன். இதோட மக்காச்சோளமும் பயிர் செஞ்சேன். அதுக்கு இந்த விருது கொடுத்து கௌரபடுத்தியிருக்காங்க” என்றார்.

இந்த பெண் விவசாயியோடு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெத்தண்ணன் என்ற விவசாயிக்கும் கிருஷி கர்மண் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.