Home Featured தமிழ் நாடு எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் – வைகோ நேரில் அழைப்பு!

எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் – வைகோ நேரில் அழைப்பு!

627
0
SHARE
Ad

vaiko-vijayakanth5-600சென்னை – மக்கள் நலக் கூட்டணிக்கு விஜகாந்த் வர வேண்டும் என்று வைகோ மீண்டும் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் கூட்டணி மக்கள் நலக் கூட்டணி.

ஆரம்பத்திலிருந்தே விஜகாந்த்தை தனது பக்கம் வருமாறு இக்கூட்டணியின் தலைவர்கள் அழைத்து வருகின்றனர். கூட்டணி அமைக்கப்பட்ட கையோடு நேரில் போய் அழைத்தனர். ஆனால் இவர்களைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை விஜயகாந்த்.

மாறாக திமுக, பாஜக பக்கம் பேசிக் கொண்டிருந்தார். இருப்பினும் இப்போதும் மக்கள் நலக் கூட்டணி விஜயகாந்த்தைக் கைவிடவில்லை. தங்களுடன் வருமாறு தொடர்ந்து அழைத்து வருகிறது. நேற்று மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்கள் தொடங்கின.

#TamilSchoolmychoice

வைகோவின் வீட்டில் இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. அதில் வைகோவுடன், திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல் கட்ட ஆலோசனையை தலைவர்கள் மேற்கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில் முதல் கட்டமாக தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசியுள்ளோம். சுமூகமாக இருந்தது. மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது தொடர்பாக தொடர்ந்தும் பேசி வருகிறோம்.

இதுதொடர்பாக விஜயகாந்த்தை நேரில் சந்தித்துப் பேசி தீர்மானித்துள்ளோம். திமுக, அதிமுக வாக்காளர்களுக்கு ஒட்டுக்கு பணம் கொடுக்க தயாராகி வருகின்றன. பண பலத்திற்கும் மக்கள் பலத்திற்கும் இடையேயான போட்டியாக இந்த தேர்தல் இருக்கும் என்றார் வைகோ.