பிரசல்ஸ் – பெல்ஜியம் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜெர்மனி எல்லையிலுள்ள டிஹாஞ்ச் (Tihange) அணு உலையை பெல்ஜியம் மூடிவிட்டு, அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றியுள்ளது என சில தகவல் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
ஆனால், அந்த அணு உலையை இயக்கும் நிறுவனமான எலெக்டாபெல் என்ற நிறுவனம் அத்தகைய வெளியேற்றம் எதுவும் டிஹாஞ்ச் அணு உலையில் நடைபெறவில்லை என டுவிட்டர் வழி அறிவித்துள்ளது.
“அனைவரும் அங்கிருந்து வெளியேற்றம் என்ற தகவல் உண்மையில்லை. ஆனால் அங்கு இருக்கத் தேவைப்படாதவர்கள் அங்கிருந்து வெளியேறலாம்” என எலெக்டாபெல் அறிவித்துள்ளது.