Home Featured கலையுலகம் விஜய் சேதுபதிக்காக 36 வருட கொள்கையை உடைத்த டி.ராஜேந்தர்!

விஜய் சேதுபதிக்காக 36 வருட கொள்கையை உடைத்த டி.ராஜேந்தர்!

800
0
SHARE
Ad

KV-Anand-Vijay-Sethupathi-TRசென்னை – இதுவரை தனது சொந்த இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்த டி.ராஜேந்தர், 36 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக வேறு இயக்குநரின் படத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த 1980-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக, நடிகராக என பல்வேறு திறமைகளுடன் அறிமுகமானவர் டி.ராஜேந்தர்.

குடும்பப் பாசம் குறித்த இவரது படங்களுக்கு, காலம் கடந்தும் மக்களிடையே ஆதரவு உள்ளது. தனது அடுக்குமொழிப் பேச்சால் தனக்கென தனி வட்டத்தை உருவாக்கிய டி.ஆர்., தான் இயக்கிய படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ளார்.

வேறு எந்த இயக்குநரின் படங்களிலும் இதுவரை அவர் நடித்ததில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘ஆர்யா சூர்யா’ படத்திலும் ஒரு குத்துப்பாடலைப் பாடி, அதற்கு நடனமாடி இருந்தார் டி.ஆர். அந்தப் படத்தில் பவர்ஸ்டார் நாயகனாக நடித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தனது 36 வருட திரையுலக வாழ்க்கையில் முதன்முறையாக வேறு இயக்குநரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.

விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் கதாநாயகி, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.