Home Featured நாடு சரவாக் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மாட் சாபு திருப்பி அனுப்பப்பட்டார்!

சரவாக் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மாட் சாபு திருப்பி அனுப்பப்பட்டார்!

706
0
SHARE
Ad

mat_sabuசிபு – அமானா நெகாரா கட்சியின் தலைவர் முகமட் சாபு (மாட் சாபு) நேற்று சரவாக்கிற்குள் நுழைய முயற்சி செய்த போது, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

நேற்று காலை 10.30 மணியளவில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில், தனது சிறப்பு அதிகாரி அசார் முகமட்டோடு சிபு விமான நிலையத்திற்கு வந்திறங்கிய மாட் சாபுவை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அதே விமானத்தில் கோலாலம்பூருக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

தான் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்பதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை என்றும் மாட் சாபு குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மாட் சாபு மட்டுமல்லாமல் எதிர்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் சரவாக்கில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் மாநில தேர்தலை முன்னிட்டு, அமனா தனது வேட்பாளர்களை நிறுத்துவதற்காகத் தயாராகி வருவதாக மாட் சாபு தெரிவித்துள்ளார்.