Home Featured தமிழ் நாடு தொகுதிப் பங்கீடு: கருணாநிதியுடன் காங்கிரஸ் பொதுச் செயலர் குலாம் நபி ஆசாத் சந்திப்பு!

தொகுதிப் பங்கீடு: கருணாநிதியுடன் காங்கிரஸ் பொதுச் செயலர் குலாம் நபி ஆசாத் சந்திப்பு!

561
0
SHARE
Ad

ghulamnabiazad-karuna-12214சென்னை – தமிழக சட்டசபைத் தேர்தல் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் பொதுச் செயலர் குலாம் நபி ஆசாத், மேலிடப் பிரதிநிதி முகுல் வாஸ்னிக் ஆகியோர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்வதற்காக திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க காங்கிரஸ் பொதுச் செயலர் குலாம் நபி ஆசாத் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் வருகிறார்கள்.

கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை மாநிலங்களவை வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் 39 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்க்க்பபடுகிறது.

#TamilSchoolmychoice

ஆனால், 25 தொகுதிகளே ஒதுக்க திமுக முன் வந்துள்ளது தெரிகிறது. ஏனேனில் சென்ற முறை காங்கிரஸில் இருந்த ஜி.கே. வாசன் தற்போது அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை துவக்கியுள்ளார்.

தேமுதிக கூட்டணியில் இடம்பெறாததால், அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் 30 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்று நடைபெறும் சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில், காங்கிரஸின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் யாரும் இடம்பெறவில்லை.