Home Featured தமிழ் நாடு திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம்!

திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம்!

908
0
SHARE
Ad

thirumaசென்னை – விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மக்கள் நலக் கூட்டணியில், மதிமுக, சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய ஐந்து கட்சிகளுக்கு 110 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 124  தொகுதிகளும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, முதல்முறையாக 2004 நாடாளுமன்ற தேர்தலிலும், 2006 சட்டசபைத் தேர்தலில் அம்பு சின்னத்தில் போட்டியிட்டது.

ஆனால், கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த திருமாவளவன் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

#TamilSchoolmychoice