கொழும்பு – நம் நாட்டின் அரசியல்வாதிகளில் சிறந்த தமிழ்ப் பேச்சாளராக – அதிலும் இலக்கிய உரை நிகழ்த்துபவராகத் திகழ்பவர் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்.
கொழும்பு கம்பன் விழாவில் உரையாற்றும் சரவணன்….
உள்நாட்டில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு பலமுறை வரவழைக்கப்பட்டு, உரையாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டவர் சரவணன்.
அந்த வகையில் கொழும்புவில் அகில இலங்கைக் கம்பன் கழகம் ஏற்பாட்டில் விமரிசையாக நடத்தப்பட்ட கொழும்புக் கம்பன் விழா 2016-இல், உலகமெங்கும் இருந்து தமிழ் ஆன்றோர்களும் சான்றோர்களும் பங்கு கொண்ட வேளையில், இவ்விழாவில் நம் நாட்டின் டத்தோ எம்.சரவணனும் பிரதம விருந்தினராக சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டார்.
கொழும்பு கம்பன் விழாவில் சரவணனுக்கு சிறப்பு செய்யப்படுகின்றது….
கொழும்புக் கம்பன் விழாவில் சரவணன் தொடக்கவுரை ஆற்றி, கொழும்பு கம்பன் விழாவில் வருகையளித்த அனைவருக்கும் கம்பனின் தனித்தமிழ் அழகை கண்ணதாசன் பாடல் வரிகளுடன் இணைத்து செம்மையுற விவரித்து உரையாற்றினார்.
கம்பன் விழாவுக்கு வருகை தந்த சரவணனுக்கும், மற்ற பிரமுகர்களுக்கும் வரவேற்பு வழங்கப்படுகின்றது