Home Featured கலையுலகம் தேசிய விருதுகள்: தமிழில் சிறந்த படம் விசாரணை! சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா!

தேசிய விருதுகள்: தமிழில் சிறந்த படம் விசாரணை! சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா!

1108
0
SHARE
Ad

Visaranai-movie still-1கோலாலம்பூர் – 63-வது தேசிய திரைப்பட விருது இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதில் இந்திய அளவில் சிறந்த படமாக ‘பாகுபலி’ அறிவிக்கப்பட்டது.

அடுத்ததாக, மாநில மொழிப்படங்கள் வரிசையில், தமிழ்ப் படமான ‘விசாரணை’ சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது.

சிறந்த எடிட்டருக்கான விருது ‘விசாரணை’ படத்திற்காக மறைந்த கிஷோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் சிறந்த பின்னணி இசைக்கான விருது ‘தாரைதப்பட்டை’ படத்திற்காக இளையராஜாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகருக்கான விருது ‘விசாரணை’ படத்தில் நடித்த சமுத்திரக்கனிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இறுதிச்சுற்று’ படத்தின் கதாநாயகி ரித்திகா சிங்கிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.