Home Featured கலையுலகம் தேசிய விருது கிடைக்காததால் விக்ரமிற்கு இழப்பு எதுவும் இல்லை – பி.சி.ஸ்ரீராம் கொதிப்பு!

தேசிய விருது கிடைக்காததால் விக்ரமிற்கு இழப்பு எதுவும் இல்லை – பி.சி.ஸ்ரீராம் கொதிப்பு!

1067
0
SHARE
Ad

ai_vikramசென்னை – விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்காதது விக்ரமுடைய இழப்பு அல்ல; இது தேசிய விருதுகளுக்கான இழப்பு என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘ஐ’ படத்திற்காக விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

63-ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதில் விக்ரமிற்கு எந்த ஒரு தேசிய விருதும் அறிவிக்கப்படவில்லை. விக்ரமுக்கு விருது கிடைக்காததால் ரசிகர்கள் பலரும் தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். மேலும், ‘ஐ’ படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ‘விக்ரமுக்கு (கென்னி) விருது ஏதும் இல்லை, வருந்துகிறேன்’.

தேசிய விருதுகள் பல நேரங்களில் அதன் நோக்கத்தை இழந்துவிடுகிறது. என்னைப் பொருத்தவரை இது விக்ரமுடைய இழப்பு அல்ல; இது தேசிய விருதுகளுக்கான இழப்பு” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பி.சி.ஸ்ரீராம்.

#TamilSchoolmychoice