Home Featured தமிழ் நாடு பிரசல்ஸ் தாக்குதல்: சென்னை வந்தடைந்தது ராகவேந்திரன் உடல்!

பிரசல்ஸ் தாக்குதல்: சென்னை வந்தடைந்தது ராகவேந்திரன் உடல்!

972
0
SHARE
Ad

raghavendran-ganeshanசென்னை – பிரசல்ஸ் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ராகவேந்திரன் நல்லுடல் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. பிரசல்ஸில் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராகவேந்திரன் கணேசன் என்ற தமிழ் மென்பொறியாளர் உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட பல அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலை ராகவேந்திரனின் குடும்பத்திற்குத் தெரிவித்துள்ளார்.