Home Featured தமிழ் நாடு விஜயகாந்த் அணி வென்றால் – வைகோ துணை முதல்வர்! திருமா, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் அமைச்சர்கள்!

விஜயகாந்த் அணி வென்றால் – வைகோ துணை முதல்வர்! திருமா, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் அமைச்சர்கள்!

672
0
SHARE
Ad

சென்னை – மற்ற எல்லா கட்சிகளையும் விட, கூட்டணிகளையும் விட தமிழகத் தேர்தலைப் பொறுத்தவரையில் களத்தில் முன்னணியில் நிற்பது விஜயகாந்தும்-மக்கள் நலக் கூட்டணியும் இணைந்த அணிதான். நாளுக்கொரு செய்தியையும், திடுக்கிடும் அஸ்திரத்தையும் விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்த வகையில், விஜயகாந்த் அணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால்  ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல் விஜயகாந்த் முதல்வராவார். அதே சமயம் வைகோ துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

vaiko-vijayakanth5-600அது மட்டுமல்ல! கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.இராமகிருஷ்ணன் நிதி அமைச்சராகவும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கல்வி அமைச்சராகவும், மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான இரா.முத்தரசன் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதாகக் கூறப்படுகின்றது.

உதாரணமாக வைகோவின் பின்னால் நீண்ட காலமாக அரசியல் போராட்டம் நடத்தி வரும் அவரது ஆதரவாளர்கள் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் பதவி விஜயகாந்துக்கு விட்டுக் கொடுக்கப்பட்டபோது சற்றே தளர்ந்தார்கள். ஆனால் தற்போது துணை முதல்வர் என்ற அறிவிப்பு வந்தவுடன் உற்சாகமாகிவிட்டார்கள்.

அதே போன்று, விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களும் தங்களின் தலைவர் ஐந்துக்குப் பத்துக்குமாக சட்டமன்றத் தொகுதிகள் கேட்டு அலைந்த காலம் மாறிப் போய் இன்று 20 அல்லது 30 தொகுதிகளில் போட்டியிடும் நிலைமைக்கு உயர்ந்துள்ளதை எண்ணி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளார்கள்.

அதோடு ஆட்சியையும் பிடித்துவிட்டால், திருமா அமைச்சர் என்ற அறிவிப்பு அவர்களின் மகிழ்ச்சியில் மேலும் உற்சாகத்தைச் சேர்த்துள்ளது.

இதனால் மக்கள் நலக் கூட்டணியின் அடிமட்டத் தொண்டர்கள் தேர்தல் பணிகளில் மேலும் கடுமையாக, தீவிரமாகப் பாடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.