Home Featured இந்தியா டி-20 அரையிறுதியில் கெய்ல் சதம் அடிக்க வேண்டும்; இந்தியா வெல்ல வேண்டும் – அமிதாப் பச்சன்...

டி-20 அரையிறுதியில் கெய்ல் சதம் அடிக்க வேண்டும்; இந்தியா வெல்ல வேண்டும் – அமிதாப் பச்சன் விருப்பம்!

696
0
SHARE
Ad

Chris Gayle meets Amitabh Bachchan in Mumbaiமும்பை – பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மேற்கு இந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்யிலுக்கு தனது வீட்டில் விருந்து வைத்து உபசரித்துள்ளார். அதற்கு கெய்ல் நன்றி தெரிவித்துள்ளார்.

வரும் 31-ஆம் தேதி (வியாழன்) இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி-20 உலக கோப்பை அரையிறுதி போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி மும்பையில் முகாமிட்டுள்ளது.

டி-20 பாஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் கெய்லை தனது வீட்டுக்கு அழைத்து இரவு விருந்து அளித்தார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். அமிதாப் வீட்டிற்கு சென்றது குறித்து கெய்ல் தனது இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளதாவது., ”வீட்டிற்கு அழைத்ததற்கும், உபசரிப்புக்கும் நன்றி”.

#TamilSchoolmychoice

“அமிதாப் பச்சன் அரையிறுதி போட்டியில் நான் சதம் அடிக்க வேண்டும் என்றும், அதேசமயம் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். ஆனால் என்னுடைய சதத்தை விட இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெருவதையே நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் “கெய்ல் என்னுடைய ரசிகர் என்று எனக்கு தெரியாது” என கூறியுள்ளார்.