Home Featured தமிழ் நாடு பிரேமலதா தங்கியிருந்த ஹோட்டலுக்குள் புகுந்து அதிமுகவினர் அராஜகம்!

பிரேமலதா தங்கியிருந்த ஹோட்டலுக்குள் புகுந்து அதிமுகவினர் அராஜகம்!

654
0
SHARE
Ad

premalatha_6சேலம் – சேலத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்துள்ளார். பிரச்சாரம் முடிந்து சேலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரேமலதா தங்கியிருந்தார். பின்பு, பிரேமலதா பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாத அ.தி.மு.க.,வினர் சிலர், பிரேமலதா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு, மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன், கண்டம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இது, ஜனநாயக அரசியலுக்கும், தேர்தல் நடைமுறை விதிகளுக்கும் எதிரானதாகும். எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை தடுக்க முனையும் வன்முறை செயலாகும்.

தலைவர்கள் தங்கியிருக்கும் இடங்களில், இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் மீது தமிழக தேர்தல் ஆணையமும், காவல் துறையும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice