Home Featured தமிழ் நாடு குஷ்புவை கண்டித்து திருநங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!

குஷ்புவை கண்டித்து திருநங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!

560
0
SHARE
Ad

kushbooசென்னை – நடிகை குஷ்புவை கண்டித்து திருநங்கையர் காங்கிரஸ் கட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான நடிகை குஷ்பு, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், திருநங்கைகள் தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர்கள் என்ற கூறியதாக கூறப்படுகிறது. இந்த கருத்து திருநங்கையர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், நடிகை குஷ்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், நடிகை குஷ்புவுக்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். குஷ்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

#TamilSchoolmychoice