கோலாலம்பூர் – காவல்துறை எச்சரிக்கையையும் மீறி, பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லிக்கு ஆதரவாக எதிர்கட்சித் தலைவர்களின் பேரணி இன்று காலை நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்கி புக்கிட் அமான் காவல்துறைத் தலைமையகத்தை அடைந்தது.
காலை 9.10 மணியளவில், தொடங்கிய இப்பேரணியில் பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில், பிகேஆர் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஹாரி அப்துல், ஜசெக கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், அமனா நெகாரா ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமட், கோல கிராய் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாட்டா ரம்லி மற்றும் பாஸ் போக்கோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாஹ்பஸ் ஓமார் உள்ளிட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர் இடம்பெற்றுள்ளனர்.
20 நிமிடங்கள் தொடர்ந்த இப்பேரணி, புக்கிட் அமான் காவல்துறைத் தலைமையகத்தில், ரபிசியை விடுதலை செய்யக் கோரி மனு அளித்த பின்னர் நிறைவு பெற்றது.
அவர்கள் அளித்த மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரைச் சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.
படம்: எம்.குலசேகரன் டுவிட்டர்