Home Featured நாடு ரபிசிக்கு ஆதரவாகப் பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் – எதிர்கட்சிகளுக்கு காலிட் எச்சரிக்கை!

ரபிசிக்கு ஆதரவாகப் பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் – எதிர்கட்சிகளுக்கு காலிட் எச்சரிக்கை!

1397
0
SHARE
Ad

Rafiziகோலாலம்பூர் – பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் இருந்து புக்கிட் அம்மான் நோக்கி பேரணி நடத்தவுள்ள எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

“அமைதிப் பேரணி சட்டம் எந்த ஒரு வீதிப்போராட்டங்களுக்கு தடை விதிக்கின்றது. எனவே எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறை எடுக்கும் கடும் நடவடிக்கைகளுக்குத் தயாராகிக் கொள்ளுங்கள்”

“ரபிசி ரம்லிக்கு ஆதரவாக புக்கிட் அம்மான் வரை பேரணி நடத்தும் நோக்கமுடையவர்கள், அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் நடந்து கொள்ளும்படி காவல்துறை நினைவுபடுத்துகின்றது.” என்று காலிட் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், சட்டத்தின் கீழ் தான் ரபிசி கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தை தலைமை வழக்கறிஞர் ஆராய்ந்து முடிவெடுப்பார் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.