Home Featured வணிகம் “ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” – மலேசியா ஏர்லைன்சின் கவர்ச்சிகரமான புதிய திட்டம்!

“ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” – மலேசியா ஏர்லைன்சின் கவர்ச்சிகரமான புதிய திட்டம்!

845
0
SHARE
Ad

Malaysia-airlines-logo-1987கோலாலம்பூர் – இன்று தொடங்கி 2016 ஏப்ரல் 18-ம் தேதி வரை, முதல் வகுப்பிலோ அல்லது வர்த்தக வகுப்பிலோ முன்பதிவு செய்யும் வாங்கும் பயணிகளுக்கு மற்றொரு சீட்டு இலவசமாக வழங்கப்படும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து மலேசியா ஏர்லைன்ஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த அன்பளிப்பு மூலம் பயணிகள் தங்களுக்குத் துணையாக மற்றொருவரையும் அழைத்துச் சென்று அவர்களை மகிழ்ச்சிப்படுத்த முடியும். அதோடு உலகம் முழுவதும் தனது விரிவான சேவையை அளித்து வரும் மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் பிரத்யேக வசதி மற்றும் பாணியை அனுபவித்திட முடியும்” என்று தெரிவித்துள்ளது.

அதேவேளையில் இந்த கவர்ச்சிகரமான விலையுடன், முதல் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் 50 கிலோ வரையிலும், வர்த்தக வகுப்பில் செல்லும் பயணிகள் 40 கிலோ வரையிலும் பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும், கோல்டன் லாஞ்சிலும் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மலேசியா ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்த மேல் விவரங்களுக்கு www.malaysiaairlines.com என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம் அல்லது  1-300-88-3000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.