Home Featured நாடு நஜிப்புக்கு சவுதியிலிருந்து தான் நன்கொடை சென்றது – சவுதி அமைச்சர் ஒப்புதல்!

நஜிப்புக்கு சவுதியிலிருந்து தான் நன்கொடை சென்றது – சவுதி அமைச்சர் ஒப்புதல்!

666
0
SHARE
Ad

najib3கோலாலம்பூர் – சவுதி அரேபியாவில் இருந்து தான் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு, நன்கொடை வந்தது என்பதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அடெல் அல் ஜூபியர் ஒப்புக்கொண்டுள்ளார்.

“நாங்கள் அந்த நன்கொடை பற்றி அறிவோம். அது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நேர்மையாக வழங்கப்பட்டது. மலேசியத் தலைமை வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் முழு விசாரணை, எந்த ஒரு தவறும் இல்லை என்று அறிவித்துள்ளதையும் நாங்கள் அறிவோம்”

“எனவே, எங்களைப் பொறுத்தவரையில் இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவுகட்டப்பட வேண்டும்” என்று நேற்று மலேசிய செய்தியாளர்களிடம் அடெல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் 13-வது உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நஜிப்பை, அடேல் சந்தித்துப் பேசியதாக ஸ்டார் உள்ளிட்ட ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.