லகாட் டத்துவில் சுலு படையினரின் ஊடுருவலுக்கு அம்னோ தான் காரணம் என்று தியான் சுவா கடந்த மார்ச் 1 ஆம் தேதி வெளியிட்ட கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கடந்த வியாழக்கிழமை அவர் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இச்சம்பவம் நடப்பதற்கு முன்னர், இரவு விருந்தில் பேசிய தியான் சுவா, சுலு படையினரின் ஊடுருவலைக் கண்டித்து அரசாங்கத்தை விமர்சித்த தன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த தேசிய முன்னணி அரசு, இனவெறியைத் தூண்டும் வகையில் பேசிய பெர்காசா தலைவர்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தன் மீது அவர்கள் எவ்வளவு அவதூறுகளைச் சுமத்தினாலும்,சுலு ஊடுருவலுக்கு அம்னோ தான் காரணம் என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
மேற்கண்ட செய்தி மலேசியாகினி இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.