கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கை நேற்று பிரதமர் நஜிப் துன் ரசாக் சந்தித்து அளவளாவினார்.
நேற்று தனது இல்லத்திற்கு காலை உணவுக்கு நஜிப் ஜாகிரை நஜிப் அழைத்திருந்தார். இந்த சந்திப்பு குறித்த விவரங்களைத் தனது முகநூல் பக்கத்தில் நஜிப் வெளியிட்டிருந்தார்.
மலேசியா மிதமான போக்கைக் கொண்ட நாடு என்பதையும், முன்னேற்றப் பாதையில் செல்ல ஒற்றுமையைக் கடைப்பிடிக்கும் நாடு என்பதையும் உலகத்திற்கு தனது செய்தியாக ஜாகிர் எடுத்துக் கூறுவார் என்ற தனது நம்பிக்கையையும் தனது முகநூல் பதிவில் நஜிப் வெளிப்படுத்தியுள்ளார்.
தனது உரைகளின் மூலம் சர்ச்சைகளை ஏற்படுத்தியவரான ஜாகிர் குறித்த பலத்த கண்டனங்களை பல இந்து, இந்திய அமைப்புகள் தெரிவித்திருந்தன.
சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அசிஸ் ஜாகிரின் மலேசிய வருகை தேவையில்லாத ஒன்று என வர்ணித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.