Home Featured நாடு வெடிகுண்டுகள் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடையவை அல்ல! குற்றவாளிகள் தயாரித்தவை!

வெடிகுண்டுகள் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடையவை அல்ல! குற்றவாளிகள் தயாரித்தவை!

521
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – இன்று இங்குள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவை, பயங்கரவாதிகள் அல்லது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தயாரிப்பா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அந்த வெடிகுண்டுகள் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளால் தயாரிக்கப்பட்டவை என துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி தெளிவுபடுத்தியுள்ளார்.

Ahmad-Zahid-Hamidi“நாட்டின் பாதுகாப்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. யாரும் கவலைப்பட வேண்டாம்” என்றும் சாஹிட் உறுதியளித்துள்ளார்.

வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கான காரணங்களை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர் என்றும் ஆனால் இது கண்டிப்பாக ஐஎஸ்ஐஎஸ் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல என்றும் சாஹிட் மேலும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

நிகழ்ச்சியொன்றில் இன்று கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சாஹிட் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து இதுவரை ஏழு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

23 மாடிகள் கொண்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 17வது மாடியிலுள்ள ஒரு வீட்டிலிருந்து இந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.