குயித்தோ – ஜப்பான் நாட்டைத் தாக்கிய நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோர நாடான இக்குவேடோர் நாட்டை 7.8 ரிக்டர் புள்ளி அளவுள்ள வலுவான நிலநடுக்கம் நேற்று சனிக்கிழமை மாலை உலுக்கியது.
இதன் காரணமாக, இதுவரை 28 பேர் மரணமடைந்துள்ளனர் என அறிவித்துள்ள அந்நாட்டு அரசாங்கம் சுனாமி அபாயம் இருக்கின்ற காரணத்தால், கரையோர மக்களை வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.