Home Featured கலையுலகம் சென்னையில், இன்று நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளோடு ரஜினிக்குப் பாராட்டு விழா!

சென்னையில், இன்று நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளோடு ரஜினிக்குப் பாராட்டு விழா!

1070
0
SHARE
Ad

சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் – உண்மையிலேயே அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் சென்னை வெயில் – இவற்றுக்கு நடுவில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக, இன்று நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி தமிழக சினிமா இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றைய போட்டிகளின் முடிவில் நடிகர் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

Star Cricket-team captainsஇன்று நடைபெறவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் போட்டியிடவிருக்கும் எட்டு குழுக்களின் தலைவர்கள் – மேலிருந்து: நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் இரவி, ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜீவா….

#TamilSchoolmychoice

நடிகர் சங்க கட்டட நிதிக்காக, சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி, இன்று காலை, 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது.

விஷால், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிவ கார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் தலைமையின் கீழ் எட்டு அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. ஆறு ஓவர் கொண்டதாக போட்டி நடத்தப்படுகிறது.கிரிக்கெட் போட்டியை, நடிகர்கள் ரஜினி, கமல் துவக்கி வைக்க உள்ளனர். நட்சத்திர பிரபலங்கள் அமிதாப், சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டி முடிந்ததும், பத்ம விபூஷண் விருது பெற்ற நடிகர் ரஜினிக்கு, நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழாவும் நடக்கிறது.

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியை சன் டிவி நேரலையாக ஒளிபரப்பவிருக்கின்றது.

இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளை நமது ஆஸ்ட்ரோவிலும், சன் தொலைக்காட்சி அலைவரிசையான 211-இல் நமது மலேசிய இரசிகர்கள் கண்டு களிக்கலாம்.