Home Featured நாடு டாமன்சாரா அடுக்குமாடியில் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன!

டாமன்சாரா அடுக்குமாடியில் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன!

562
0
SHARE
Ad

Malaysian Policeபெட்டாலிங் ஜெயா – இங்குள்ள டாமன்சாரா பெர்டானா பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட 5 வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மலேசியாவில் இதுபோன்ற சம்பவங்கள் வெகு அபூர்வமாகவே நடைபெறும் என்பதால் பொதுமக்களிடையே இதுகுறித்து ஆச்சரியமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இன்று விடியற்காலை 4,30 மணியளவில் காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி வேட்டையில் இந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, பெட்டாலிங் ஜெயா காவல் துறை தலைவர் முகமட் சானி செ டின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு மலேசியர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்கள் முன்னதாக அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் காவல் துறையினர் நம்புகின்றனர்.

அந்த வீட்டில் ஷாபு மற்றும் எக்ஸ்டாசி மாத்திரைகள் எனப்படும் போதைப் பொருட்களும் காணப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட ஐந்து நாட்டு வெடிகுண்டுகளும் இன்று நண்பகலில் அருகிலுள்ள ஒரு கல் உடைப்பு சுரங்கத்தில் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நிலக்கரித் தூள், குழாய்கள் ஆகியவற்றையும் காவல் துறை கைப்பற்றியுள்ளது.

“நாங்கள் சந்தேகப் பேர்வழிகளைத் தேடி வருகின்றோம். விசாரணைகளும் நடத்தி வருகின்றோம்” என்றும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

இன்று காலை 8.00 மணி முதல் மெட்ரோபோலிடன் ஸ்குவேர் கொண்டோமினியம் என்ற அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வேறு ஏதாவது வெடிகுண்டுப் பொருட்கள் அந்தக் குடியிருப்பில் இருக்கின்றதா என காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.