இந்நிலையில், அதற்குப் பதிலளிக்கும் விதமாக நேற்று மலாக்காவில் நடைபெற்ற தனது சொற்பொழிவின் போது சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் ஜாகிர் நாயக்.
“நான் ஹிண்ட்ராப்பைக் கண்டு அஞ்சவில்லை. நான் காவல்துறையில் அளிக்கப்படும் புகார்களைக் கண்டும் அஞ்சவில்லை. இஸ்லாமில், நாம் யாரையும் அவர்களது மதத்திலிருந்து மாறும் படி கட்டாயப்படுத்தமுடியாது.”
“நான் கடவுள் அல்லாவுக்கு மட்டும் தான் அஞ்சி நடப்பேன். சாதாரண மனிதர்களைக் கண்டு அஞ்ச மாட்டேன்” என்று நேற்று இரவு மலாக்காவில் மலேசியத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சொற்பொழியின் போது ஜாகிர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.