Home Featured தமிழ் நாடு ரஜினிகாந்த் குறித்து கருத்து: விஜயகாந்த்தின் உருவபொம்மை எரிப்பு!

ரஜினிகாந்த் குறித்து கருத்து: விஜயகாந்த்தின் உருவபொம்மை எரிப்பு!

750
0
SHARE
Ad

rajinikandhசென்னை – தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் பொதுக்கூட்டத்தில் ரஜினிகாந்த் குறித்து கருத்து தெரிவித்ததையடுத்து, அவரது உருவப்பொம்மையை ரஜினி ரசிகர்கள் எரித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை [15-04-16] அன்று திருத்தணி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து திருத்தணி யைரயில் நிலையம் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், ”எனது கஜேந்திரா திரைப்படத்திலிருந்த காட்சிகளை பாமகவினர் நீக்கச் சொன்னார்கள். ஆனால், விஜயகாந்த் எப்போதும், யாருக்கும் பயப்பட மாட்டான். நல்ல மனதிற்கு மட்டும்தான் பயப்படுவான்”.

#TamilSchoolmychoice

“நான் பயந்துவிடுவேன் என்று நினைத்தார்கள். எனக்கு பயம் இல்லை. பணம்தானே போனால் போகட்டும். ரஜினிகாந்த் மாதிரி நான் யாருக்காகவும் பின்வாங்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.

இதனால், அதிருப்தி அடைந்த ரஜினி ரசிகர்கள் தமிழகத்தில் பல இடங்களில் விஜயகாந்த்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் காலனியில் ரஜினி ரசிகர்கள் விஜயகாந்தின் உருவ பொம்மையை எரித்து கோஷங்கள் போட்டனர்.