Home Featured தமிழ் நாடு குஷ்புவைத் தொடர்ந்து கருணாநிதியைச் சந்தித்த விஜயதரணி!

குஷ்புவைத் தொடர்ந்து கருணாநிதியைச் சந்தித்த விஜயதரணி!

643
0
SHARE
Ad

karuna-vijayadharaniசென்னை – திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு வேட்பாளர் விஜயதரணி இன்று நேரில் சந்தித்தார். சட்டசபைத் தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இக்கூட்டணியில் காங்கிரசிற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின் திமுகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, திமுக தலைவர் கருணாநிதியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தார். பிரச்சாரத்திற்கு முன்னதாக மரியாதை நிமித்தம் கருணாநிதியைச் சந்தித்ததாக குஷ்பு தெரிவித்தார்.

தற்போது குஷ்புவைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு வேட்பாளரும், காங்கிரசின் அகில இந்திய பொதுச்செயலாளருமான விஜயதாரணி இன்று கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதேபோல், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் கருணாநிதியை இன்று சந்தித்தார். திமுக கூட்டணியில் புதிய தமிழகமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தகக்து.

இந்த சந்திப்பிற்கு பின்னர், மரியாதை நிமித்தமாக கருணாநிதியைச் சந்தித்ததாக விஜயதரணியும், கிருஷ்ணசாமியும் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது இருவரும் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றதாகவும் கூறியுள்ளனர்.