Home Featured நாடு திரெங்கானுவில் மீண்டும் சலசலப்பு: சுல்தானை அவமதித்தாரா அகமட் ராசிஃப்?

திரெங்கானுவில் மீண்டும் சலசலப்பு: சுல்தானை அவமதித்தாரா அகமட் ராசிஃப்?

900
0
SHARE
Ad

Datuk_Ahmad_Razif_Abdul_Rahman_bonusகோல திரெங்கானு – ‘டத்தோஸ்ரீ’ பட்டம் பறிக்கப்பட்டது தொடர்பாக திரெங்கானு மந்திரி பெசார் அகமட் ராசிஃப் அப்து ரஹ்மான், செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

நேற்று காலை நடைபெற்ற (Wakaf Senusantara Conference 2016) அறிமுக விழாவில் கலந்து கொண்ட பின்பு, தனது காரை நோக்கி வேகமாக சென்ற அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்ற போது, அவர் நிற்காமல் சென்றுவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் திரெங்கானு சுல்தானை அவமதிப்பது போல் அகமட் ராசிஃப் நடந்து கொண்டதால், உடனடியாக அவரது வழங்கப்பட்ட கௌரவப் பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன என்றும் நட்பு ஊடகங்களில் செய்திகள் பரவின.

#TamilSchoolmychoice

அதற்கு அடுத்த நாள் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், அகமட் ராசிஃப்பை அழைக்கும் போது, அவரது பட்டங்களைக் குறிப்பிடாமல், “Yang Amat Berhormat Menteri Besar” என்று அழைத்த போதும் தான் இந்த விவகாரம் அனைவருக்கும் உறுதியாகத் தெரியவந்தது.

செபராங் தாகிர் சட்டமன்ற உறுப்பினரான அகமட் ராசிஃப் கடந்த 2014-ம் ஆண்டு மே 13-ம் தேதி மந்திரி பெசாராகப் பதவி ஏற்றதாக அறிக்கைகள் கூறுகின்றன.

கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி, சுல்தானின் 53-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு ‘டத்தோஸ்ரீ’ பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசைன், உண்மை நிலவரம் தெரியும் வரை அனைத்துத் தரப்பினரையும் அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.