Home Featured நாடு சரவாக் தேர்தல்: போட்டியின்றி இரண்டு தொகுதிகளில் பாரிசான் வெற்றி!

சரவாக் தேர்தல்: போட்டியின்றி இரண்டு தொகுதிகளில் பாரிசான் வெற்றி!

611
0
SHARE
Ad

Sarawak - State Assembly seats mapமிரி – சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தற்போதைய நிலவரப்படி, இரண்டு தொகுதிகளில் சரவாக் பாரிசான் நேஷனல், போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

புக்கிட் கோத்தா தொகுதியில், டத்தோ டாக்டர் அப்துல் ரஹ்மான் இஸ்மாயிலும், புக்கிட் சாரி தொகுதியில் டத்தோ அமர் அவாங் தெங்காவும் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து (PBB) கட்சியைச் சேர்ந்த அவர்கள் இருவரும் தங்களது நடப்புத் தொகுதியைத் தக்க வைத்துள்ளனர்.

இன்று மதியம் 1 மணியளவில் தேர்தல் ஆணையம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று தகவல்கள் கூறுகின்றன.