Home Featured கலையுலகம் வெங்கட் பிரபு படத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின்- முரளி விஜய்யா?

வெங்கட் பிரபு படத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின்- முரளி விஜய்யா?

762
0
SHARE
Ad

venkat-prabhuசென்னை – வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் தமிழக கிரிக்கெட் வீரர்கள் அஸ்வினும், முரளி விஜய்யும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு தற்போது ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

இதில் முதல் பாகத்தில் இடம் பெற்ற ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். மேலும் வைபவ், மகத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. கிரிக்கெட் படம் என்பதால் தமிழக கிரிக்கெட் வீரர்களான முரளி விஜய்யும், அஸ்வினும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

அனேகமாக ஏதாவது ஒரு காட்சியில் அல்லது ஒரு பாடல் காட்சியில் தோன்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முரளி விஜய்யும், அஸ்வினும் விளையாடி வருவதால், இவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள், ஐ.பி.எல் முடிந்த பிறகு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

‘பிளாக் டிக்கெட் நிறுவனம்’ மூலம் வெங்கட் பிரபு தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.