Home Featured நாடு அகமட் ராசிஃப் விவகாரம்: விரைவில் திரெங்கானு சுல்தானைச் சந்திக்கிறார் நஜிப்!

அகமட் ராசிஃப் விவகாரம்: விரைவில் திரெங்கானு சுல்தானைச் சந்திக்கிறார் நஜிப்!

500
0
SHARE
Ad

EPA/FAZRY ISMAIL

கூச்சிங் – திரெங்கானு மந்திரி பெசாரின் ‘டத்தோஸ்ரீ’ பட்டம் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விரைவில் அம்மாநில சுல்தான் மிசான் சைனல் அபிடினைச் சந்திக்கவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

அதுவரை யாரும் இந்த விவகாரத்தில் வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

திரெங்கானு அரண்மனைக்கும், மந்திரிபெசார் அகமட் ராசிஃபிற்கும் இடையே பிணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தான் இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றில் அகமட் ராசிஃபை அழைக்கும் போது ‘டத்தோஸ்ரீ’ பயன்படுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, நஜிப் கூறுகையில், திரெங்கானு மாநில அரசாங்கத்தின் நிர்வாக வழக்கமாகவே செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

“விரைவில் சுல்தானைச் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகு இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிடுகின்றேன்” என்று இன்று கூச்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நஜிப் தெரிவித்துள்ளார்.