நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப்பேசிய விஜயகாந்த், திமுகவும் அதிமுகவும் விஷச் செடிகள் என்றார். புதுவையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதை விரும்பாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது கடும் விமர் சனங்களை எழுப்பிய விஜயகாந்த், 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாதிக் பாட்ஷா சாவிலும் மர்மம் இருப்பதாகக் கூறினார்.
1967-ஆம் ஆண்டு அண்ணா உருவாக்கியதைப்போன்ற கூட்டணியை தாம் உருவாக்கியுள்ளதாகம் விஜயகாந்த் தெரிவித்தார். கூட்டத்தை முடித்துக்கொண்டு விஜயகாந்த் கிளம்பும்போது கூட்ட நெரிசலை ஏற்பட்டதால் எரிச்சல் அடைந்த விஜயகாந்த் தமது பாதுகாவலரை மீண்டும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜயகாந்த் தனது பாதுகாவலரை தாக்கிய காணொளி: