Home Featured தமிழ் நாடு இன்று மாலை 6 மணிக்கு கோவையில் ஜெயலலிதா பிரசாரம்!

இன்று மாலை 6 மணிக்கு கோவையில் ஜெயலலிதா பிரசாரம்!

719
0
SHARE
Ad

jayalalitaaகோவை – முதல்வர் ஜெயலலிதா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் இன்று மாலை 5.45 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.

அங்கிருந்து கார் மூலம் பொதுக் கூட்டமேடைக்கு வருகிறார். பொதுக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களையும்  நீலகிரி மாவட்டத்தின் சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள், திருப்பூர், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் மற்றும் கேரளாவில் போட்டியிடும் 7 பேட்பாளர்கள் உட்பட 23 வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

முதல்வர் ஜெயலலிதா பேசும் மேடை பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்பதால், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர வசதியாக 40 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் விபத்துக்களை தடுக்கவும், மக்கள் அவதிப்படாமல் இருக்கவும், மைதானத்தில் பல்வேறு இடங்களில் ஆயிரம் லிட்டர், 2 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் பாக்கட்டுகளும் வைக்கப்பட்டுள்ளது.

இவற்றை தொண்டர்களுக்கு கொடுப்பதற்காக மட்டும் 2000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மைதானத்தை சுற்றி 50 இடங்களில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.