Home Featured நாடு ரிடுவானைக் கண்டுபிடிக்க இயலாத காவல்துறை மீது இந்திரா அதிருப்தி!

ரிடுவானைக் கண்டுபிடிக்க இயலாத காவல்துறை மீது இந்திரா அதிருப்தி!

632
0
SHARE
Ad

Indira Gandhi newகோலாலம்பூர் – தனது மகளுடன் முன்னாள் கணவர் மொகமட் ரிடுவான் அப்துல்லா என்ற கே.பத்மநாபன், நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என பாலர் பள்ளி ஆசிரியை ஆன எம்.இந்திரா காந்தி, இரண்டு நாட்களுக்கு முன்பு தான் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அவர் நினைத்தது போலவே தற்போது நடந்துவிட்டதால், மிகவும் அச்சமும்,  கவலையும் அடைந்துள்ளார்.

இஸ்லாம் மதத்தைத் தழுவிய மொகமட் ரிடுவான் அப்துல்லா எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை என்று காவல்துறை கூறுவதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ள அவர், “அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல்துறை கூறுவது நம்பும்படியாக இல்லை. காவல்துறையால் ஏன் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை?” என்று இந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

“அவரைக் கைது செய்யக் கூடாது என்பதால் காவல்துறை இவ்வாறு சாக்கு சொல்லி வருகின்றது. அவர் ஒரு மலேசியர், மலேசியக் கடப்பிதழ் மற்றும் அடையாள அட்டை வைத்திருக்கிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரே கைப்பேசி எண்ணைத் தான் பயன்படுத்தி வருகின்றார். அப்படி இருந்தும் ஏன் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை?” என்று மலேசியாகினி இணையதளத்திடம் இந்திரா கூறியுள்ளார்.