Home Featured கலையுலகம் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுப்போட வருவார் – விஷால் தகவல்!

கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுப்போட வருவார் – விஷால் தகவல்!

639
0
SHARE
Ad

kamal-vishalசென்னை – கமல்ஹாசன் தேர்தலில் நிச்சயம் ஓட்டுப்போட வருவார் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்திருக்கிறார். ‘இந்தத் தேர்தலில் எனக்கு வாக்குரிமை இல்லை. எனவே ஓட்டுப் போட மாட்டேன். படப்பிடிப்பிற்கு சென்றுவிடுவேன்’ என்று நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கூறியிருந்தார்.

இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் களைகட்டத் தொடங்கி தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் ‘வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் ஓட்டுப்போட வருவார் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும். தேர்தலில் முதல் நிலை வாக்காளர்கள் ஓட்டுப்போட வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஓட்டுப்போடாமல் யாரும் இருக்க கூடாது.

#TamilSchoolmychoice

புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முதல் நிலை வாக்காளர்கள் எல்லோரும் வாக்களிக்க முன் வரவேண்டும்” என்று கூறியிருக்கிறார். கமல்ஹாசன்-ஸ்ருதி நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு மே 16-ஆம் தேதி வெளிநாட்டில் துவங்குகிறது.

இதனால் சட்டமன்றத் தேர்தல் அன்று கமல் இந்தியாவில் இருக்க மாட்டார். இந்நிலையில் நடிகர் விஷால், கமல் கண்டிப்பாக ஓட்டுப்போட வருவார் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.