கோலாலம்பூர் – பாலர் பள்ளி ஆசிரியை இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா என்ற பத்மநாபன் எங்கிருக்கிறார் என்பது பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 5000 ரிங்கிட் சன்மானம் வழங்கவிருப்பதாக மஇகா இளைஞர் பிரிவு அறிவித்துள்ளது.
இது குறித்து மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜா, எப்எம்டி இணையதளத்திடம் கூறுகையில், “ரிடுவானைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்று காவல்துறை கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
உலகளவில், வழக்குகளைக் கையாள்வதில், சிறந்த காவல்துறையினருக்கான தர வரிசையில் மலேசிய காவல்துறையும் இடம்பிடித்திருக்கும் நிலையில், தலைமறைவாகியிருக்கும் ரிடுவானை நிச்சயம் கண்டறிய முடியும் என்றும் சிவராஜா தெரிவித்துள்ளார்.
எனினும், காவல்துறைக்கு உதவும் வகையில், ரிடுவானைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு மஇகா இளைஞர் பிரிவு 5000 ரிங்கிட் ரொக்கம் சன்மானம் வழங்கும் என்றும் சிவராஜா அறிவித்துள்ளார்.