Home Featured தமிழ் நாடு அனுமதியின்றி தேர்தல் பிரசாரம்: நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு!

அனுமதியின்றி தேர்தல் பிரசாரம்: நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு!

680
0
SHARE
Ad

kooshbuநாகர்கோவில் – அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக தேர்தல் பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை குஷ்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார். கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமாரை ஆதரித்து பேசினார்.

இதற்கிடையே குழித்துறை பகுதியில் பிரச்சாரம் செய்ய முறையாக அனுமதி வாங்கவில்லை எனத்தெரிகிறது. இதுகுறித்து விளவங்கோடு தேர்தல் பார்வையாளர் டேவிட் ஜெபசிங் களியக்காவிளை போலீசில் புகார் கொடுத்தார்.

#TamilSchoolmychoice

அந்த புகாரின் பேரில் நடிகை குஷ்பு, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி ஆகியோர் மீது, அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.