குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் ராஜவர்தன்சிங் ரத்தோர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். தமிழில் சிறந்த படமாக வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ தேர்வு பெற்றது.
இசைஞானி இளையராஜா ‘தாரை தப்பட்டை’ படத்திற்கு இசை அமைத்ததற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு தேர்வு பெற்றார். ஆனால் பல்வேறு காரணங்களால் இளையராஜா உள்பட தமிழ் படவுலகை சேர்ந்த பலரும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை.
ஆனால் அப்போதும் அந்த விருதினைப் பெற டெல்லிக்குப் செல்லவில்லை. பின்னணி இசை, பாடல்கள் என தனித்தனியாகப் பிரித்து தேசிய விருது தருவதை இளையராஜா விரும்பவில்லை.
‘சிறந்த பின்னணி இசையைத் தந்தவர், சிறந்த பாடலைத் தரமாட்டாரா? எதற்காக இந்த பாகுபாடு?’ என்று அவர் ஏற்கெனவே கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.