சுங்கை சிப்புட் – சுங்கை சிப்புட் காவல்துறைத் தலைமையகத்தில் நேற்று கைதி ஒருவர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் 12.10 மணியளவில், காவலர்கள் தங்களது வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, 39 வயதான கைதி ஒருவர் தூக்கில் தொங்கியிருந்ததைப் பார்த்ததாக பேராக் துணை காவல்துறைத் தலைவர் ஹஸ்னான் ஹஸ்சான் தெரிவித்துள்ளார்.
“அக்கைதிக்கு வழங்கப்பட்ட ஆடை (T-Shirt) கொண்டு தூக்கிலிட்டுக் கொண்டுள்ளார். சுங்கை சிபுட் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தற்போது இந்தத் தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது”
“பிரேதப் பரிசோதனையின் அடிப்படையில், அக்கைதியில் இறப்பு தூக்கிலிட்டுக் கொண்டதால் ஏற்பட்ட கழுத்து நெரிவு காரணமாகவே நிகழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மற்றபடி அவரது உடம்பில் காயம் எதுவும் இல்லை” என்று நேற்று இரவு ஹஸ்னான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
போதை குற்றத்திற்காக கடந்த மே 2-ம் தேதி, அந்நபர் கைது செய்யபப்ட்டதாகவும் ஹஸ்னான் தெரிவித்துள்ளார்.