Home Featured தமிழ் நாடு சோனியா-கருணாநிதி ஒரே மேடையில் இன்று பிரச்சாரம்!

சோனியா-கருணாநிதி ஒரே மேடையில் இன்று பிரச்சாரம்!

602
0
SHARE
Ad

Karunanidhi-Sonia gandhiசென்னை – சென்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் ஒரே மேடையில் இன்று மாலை பிரச்சாரம் செய்கின்றனர். நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜவுக்கு ஆதரவு திரட்ட பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

இதைத் தொடர்ந்து சென்னையில் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 16-ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, தேமுதிக, தமாகா, மக்கள் நல கூட்டணி, பாஜ கூட்டணி மற்றும் நாம் தமிழர் என ஐந்துமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், பிரச்சாரம் சூடுபிடித்த நிலையில் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. அதேபோல், இம்முறை வேட்புமனு தாக்கலுக்கு முன்பே முக்கிய கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரமும் தொடங்கியது.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்களும் தமிழகத்துக்கு படையெடுக்கின்றனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதுச்சேரியில் பிரச்சாரத்தை முடித்து விட்டு, இன்று சென்னை வருகிறார். சென்னை தீவுத்திடலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் பொதுக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.

பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னை நந்தனத்தில் உள்ள ஓய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் மோடி பேசுகிறார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் அன்று தனது ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டு கேட்கிறார்.

வரும் 7-ஆம் தேதி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். அவரும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கோவையில் ஒரே மேடையில் பேசுகின்றனர். தலைவர்களின் வருகையால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.