Home Featured தமிழ் நாடு விஜயகாந்த் சிந்திக்கும் தன்மையற்றவர் – சரத்குமார் விமர்சனம்! ( காணொளியுடன்)

விஜயகாந்த் சிந்திக்கும் தன்மையற்றவர் – சரத்குமார் விமர்சனம்! ( காணொளியுடன்)

608
0
SHARE
Ad

sarath kumarபாளையங்கோட்டை  – தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – த.மா.கா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த், சிந்திக்கும் திறமை இல்லாதவர் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விமர்சித்துள்ளார்.

பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளர் ஹைதர் அலியை ஆதரித்து, சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து முழுமையான புள்ளி விபரம் தெரியாமல், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசுவதாகக் குற்றம் சாட்டினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். திமுக காங்கிரஸ் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சித்த சரத்குமார், கருத்துகணிப்புகள் பொய்யானது என்றும் கருத்து தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – த.மா.கா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த், சிந்திக்கும் திறமை இல்லாதவர் என  சரத்குமார் கடுமையாக சாடினார்.