கூச்சிங் – சரவாக் மாநிலத்தை ஆள பூமிபுத்ரா அல்லாதவர்களை, குறிப்பாக ஜசெக-வைச் சேர்ந்தவர்களை பாஸ் அனுமதிக்காது என பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
சரவாக் மாநிலத்தில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் இருந்தாலும் கூட, இஸ்லாமியக் கொள்கைகளின் படி மாநிலத்தை ஆள பூமிபுத்ரா முஸ்லிமின் தலைமைத்துவமே அமைய வேண்டும் என்றும் ஹாடி தெரிவித்துள்ளார்.
“சீனர்கள், இந்தியர்கள் மற்றும் மற்ற இனங்களைச் சேர்ந்த தலைவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தலைமை வகிக்க ஒரு முஸ்லிம் தேவை”
“அதனால் தான் சரவாக் மாநிலத்தில் ஒரு பூமிபுத்ரா முஸ்லிம் ஆள வேண்டும் என்று பாஸ் நினைக்கின்றது. மற்ற இனத்தவர்கள் கிடையாது” என்று நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஹாடி தெரிவித்துள்ளார்.
மேலும், சரவாக் தேர்தலில் 11 இடங்களில் பாஸ் போட்டியிட முடிவெடுத்ததற்குக் காரணம் அம்மாநிலத்தை ஆளும் எண்ணம் பாஸ் கட்சிக்குக் கிடையாது என்றும் ஹாடி தெரிவித்துள்ளார்.