சிங்கப்பூர் – சிங்கப்பூரின் புக்கிட் பாத்தோக் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) வேட்பாளராகப் போட்டியிட்ட முரளி பிள்ளை (படம்) 61 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்டிபி கட்சியின் சீ சூன் ஜூவான் 39 சதவீத வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டுள்ளார்.
25,727 பதிவு பெற்ற வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் மாலை 5.00 மணி வரையில் 21,566 வாக்காளர்கள் – அதாவது சுமார் 83 சதவீதத்தினர் – வாக்களித்துள்ளனர்.
புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஓங், ஒரு பிஏபி கட்சிப் பணியாளர் ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ராஜினாமா செய்ததன் காரணமாக, இந்த இடைத் தேர்தல் இன்று நடத்தப்பட்டது.