இந்த வெற்றி முதலமைச்சர் அட்னான் சாத்திம் தலைமைத்துவத்திற்குக் கிடைத்த தனிப்பட்ட வெற்றியாகவும், அவரது அணுகுமுறை, கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பெற்ற வெற்றியாகவும் பார்க்கப்படுகின்றது.
ஜசெக 7 தொகுதிகளும், பிகேஆர் 3 தொகுதிகளும் மட்டுமே பெற்றிருந்தாலும், பல எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநிலத்துக்குள்ளேயே நுழைய முடியாமல் தடை விதிக்கப்பட்டது – அவர்களுக்கு பல விதங்களிலும் தரப்பட்ட நெருக்கடிகள் – இவற்றின் காரணமாகவே, அவர்களால் போதிய அளவுக்கு வெற்றிகளைப் பதிவு செய்ய முடியவில்லை என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இன்றிரவே, மாநில ஆளுநர் மாளிகையில், அட்னான் சாத்திம் சரவாக் மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டு, பதவியேற்கவிருக்கின்றார் என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.