Home Featured நாடு சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: 5வது சடலம் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர்!

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: 5வது சடலம் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர்!

853
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கூச்சிங் – சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட ஐந்தாவது சடலம், பேராக் மாநிலத்தின் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் வான் முகமட் கைரில் அனுவார் வான் அஹ்மாட்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடல்துறை காவல் படையினரால் கண்டெடுக்கப்பட்ட அந்த சடலம் நேற்று மாலை 6.50 மணியளவில் லிங்கா ஜெட்டி எனப்படும் படகுத் துறைக்கு கொண்டுவரப்பட்டது.

இனி ஒரே ஒரு பயணியைத்தான் மீட்புக்குழுவினர் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

இதுவரையில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் நோரியா காஸ்னோன், அவரது மெய்க்காப்பாளர் அகமட் சோப்ரி ஹாருண், தோட்ட, மூலத் தொழில் அமைச்சின் தலைமைச் செயலாளர் சுந்தரன் அண்ணாமலை, கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் வான் முகமட் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 3.26 மணியளவில் நான்காவதாகக் கண்டெடுக்கப்பட்ட சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

சரவாக் மாநிலத் தேர்தல் முடிவுகளுக்காக கூச்சிங் வந்திருக்கும் பிரதமர் நஜிப்பும், துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடியும், நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் பிரேதக் கிடங்குக்குக் கொண்டுவரப்பட்டபோது, மருத்துவமனையில் இருந்தனர்.