Home 13வது பொதுத் தேர்தல் தே.மு.வின் கோட்டைக்குள் நுழையும் லிம் கிட் சியாங் – கேலாங் பாத்தா தொகுதியில் போட்டி?

தே.மு.வின் கோட்டைக்குள் நுழையும் லிம் கிட் சியாங் – கேலாங் பாத்தா தொகுதியில் போட்டி?

784
0
SHARE
Ad

Lim-Kit-Siang-Slider---2ஜோகூர், மார்ச் 17 –  வரும் 13ஆவது பொதுத்தேர்தலில், ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங் ஜோகூர் மாநிலத்தில், கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இதன் மூலம் தேசிய முன்னணியின் அசைக்க முடியாத கோட்டை எனக் கருதப்படும் ஜோகூர் மாநிலத்திற்குள் நுழைந்து அந்த மாநிலத்தையும் அசைத்துப் பார்க்க ஜ.செ.க. முன்வந்துள்ளது.

தேசிய முன்னணிக்கு சாதகமான தொகுதி என கேலாங் பாத்தா கருதப்பட்டாலும்,   தற்போதைய அரசுக்கெதிரான வாக்காளர்களின் மனப்போக்கை தமக்குச் சாதமான வாக்குகளாக பெறமுடியும் என்ற உறுதியான நம்பிக்கையில் கிட் சியாங் இத்தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதை எதிர்கட்சியினரின் அறிவிப்பின் மூலம் அறிய முடிகிறது.

#TamilSchoolmychoice

கேலாங் பாத்தா தொகுதியை வெல்வாரா கிட் சியாங்?

54 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 34 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும் 12 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும்  கொண்டுள்ள நிலையில், இத்தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள சீனர்களும் தேசிய முன்னணிக்கு எதிர்ப்பான  மனப்போக்கைக் கொண்டிருப்பதால் அத்தொகுதியை வெற்றிக்கொள்ள முடியும் என்றே பக்காத்தானும்  நம்புகிறது.

கடந்த 2004 மற்றும 2008 பொதுத் தேர்தல்களில்  இத்தொகுதியில் ஜோகூர் மசீச மகளிர் அணித் தலைவர் டான் ஆ எங்கை எதிர்கொண்டு வெற்றி வாய்ப்பை இழந்த பிகேஆர்,  தொகுதிமாற்று அடிப்படையில் இம்முறை அத்தொகுதியை தனது பங்காளிக்கட்சியான ஜ.செ.க விடம் விட்டுக் கொடுத்திருக்கிறது.

கடந்த 2008 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 8,851 வாக்குகள் வித்தியாசத்தில் இத்தொகுதியை வென்ற தேசிய முன்னணியிடமிருந்து, இம்முறை இத்தொகுதியை கைப்பற்றுவதோடு, ஜோகூர், மாநிலத்தைக் கைப்பற்றும் நோக்கிலும் அந்த மாநிலத்தின் நாடாளுமன்றத் தொகுதிகளில் கணிசமானவற்றைக் கைப்பற்றும் நோக்கிலும் மக்கள் கூட்டணித் தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.