Home Featured நாடு உயர் இரத்த அழுத்தம் காரணமாக அன்வார் மருத்துவமனையில் அனுமதி!

உயர் இரத்த அழுத்தம் காரணமாக அன்வார் மருத்துவமனையில் அனுமதி!

531
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர் – உயர் இரத்த அழுத்தம் காரணமாக, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சுங்கை பூலோ சிறையிலிருந்து மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞரும், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவராசா தெரிவித்துள்ளார்.

அன்வாரின் இரத்த அழுத்தம் இயல்பாக இல்லாமல் இருப்பதாகவும் சிவராசா குறிப்பிட்டுள்ளார்.

“அவருக்காக பிரார்த்தனை செய்வோம்” என்று சிவராசா தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஓரினப்புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அன்வார், சுங்கை பூலோ சிறைச்சாலையில் தனது தண்டனைக் காலத்தைக் கழித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.